Bondy : காவல்துறையினரை மோதிய மகிழுந்து.. துப்பாக்கிச்சூடு!
21 ஆனி 2024 வெள்ளி 09:05 | பார்வைகள் : 10238
அதிவேகமாக பயணித்த மகிழுந்து ஒன்று காவல்துறையினர மோதி தள்ளியுள்ளது. Bondy (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் ஜூன் 20 நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
Allée Léon பகுதியில் மாலை 5 மணி அளவில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், கறுப்பு நிற Mercedes SUV மகிழுந்து ஒன்று வேகமாக பயணித்ததை பார்த்துள்ளனர். அதனை நிறுத்தும்படி காவல்துறையினர் சமிக்ஞை தெரிவித்தும், மகிழுந்து நிற்காமல் தொடர்ந்து பயணித்துள்ளது.
அதையடுத்து காவல்துறையினர் குறித்த மகிழுந்தை மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்றனர். அதையடுத்து மகிழுந்து காவல்துறையினரை இடித்து தள்ள முற்பட்டுள்ளது. இதில் காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி வீரர் ஒருவர் காயமடைந்தார்.
அதைத்தொடர்ந்து, குறித்த மகிழுந்து நோக்கி காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டனர். ஆனால் சாரதி காயமடையவில்லை. அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவானார்.
பின்னர் சில நிமிடங்களில் அவரது மகிழுந்து rue César-Delaine வீதியில் உள்ள வாகன திருத்துமிடம் ஒன்றில் பதுக்கப்பட்டிருந்த நிலையில், அது கைப்பற்றப்பட்டது.
தப்பிச் சென்ற நபர் தேடப்பட்டு வருகிறார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan