Paristamil Navigation Paristamil advert login

■ இல் து பிரான்சுக்குள் இரவு நேர போக்குவரத்து சேவை!

■ இல் து பிரான்சுக்குள் இரவு நேர போக்குவரத்து சேவை!

21 ஆனி 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 5428


இன்று ஜூன் 21, வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் மெற்றோ மற்றும் RER சேவைகள் இயக்கப்பட உள்ளன.

'இசைத் திருவிழா 2024' (Fête de la musique) நிகழ்ச்சி இன்று இடம்பெற உள்ளது. அதை முன்னிட்டே இந்த இரவு நேர சேவைகள் இயக்கப்பட உள்ளன. வழக்கமாக நள்ளிரவு 1.30 மணியுடன் நிறைவுக்கு வரும் சேவைகள், இன்று இரவு முழுவதும் பயணித்து நாளைக் காலையும் தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.

மெற்றோக்களில் 1, 2, 4, 6, 9 ம்ற்றும் 14 இலக்க சேவைகளும், RER சேவைகளில் A, B, C, D மற்றும் E ஆகிய சேவைகள் இயக்கப்பட உள்ளன. RER A, B மற்றும் E ஆகிய சேவைகள் Gare de l'Est - Chelles மற்றும் Gare de l'Est - Tournan நிலையங்கைடையே பயணிக்கும்.

(நன்றி : ile de france mobilité)

Transilien சேவைகளில் H, J, L, N, P மற்றும் R ஆகிய சேவைகள் இயக்கப்படும். ஒருமணிநேரத்துக்கு மூன்று சேவைகள் வீதம் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்