பரிஸ் : கத்திக்குத்து தாக்குதலில் இருவர் காயம்... ஒருவர் கவலைக்கிடம்...!

19 ஆனி 2024 புதன் 15:38 | பார்வைகள் : 8791
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பரிஸ் 1 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்ற இரண்டு கத்திக்குத்து தாக்குதல்களில் இருவர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் படுகாயமடைந்து உயிருக்காபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒருசில நிமிடங்கள் இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
முதலாவது சம்பவம் Châtelet-les-Halles பகுதியில் இடம்பெற்றுள்ளது. 33 மற்றும் 34 வயதுடைய இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ‘ rue Saint-Denis’ வீதியில் உள்ள Café Oz விடுதியின் முன்பாக , வாடிக்கையாளர் ஒருவரை இருவர் தாக்கியுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து சில மீற்றர் தூரத்தில், rue des Lombards வீதியில் வைத்து மற்றொருவரைத் தாக்கியுள்ளனர்.அவருக்கு மூன்று வெட்டுக்காயங்கள் ஏற்பட்டிருந்தன.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025