■ Aubervilliers : காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி..!

19 ஆனி 2024 புதன் 13:48 | பார்வைகள் : 8519
திருப்பிலி (tournevis) ஒன்றின் மூலம் வீதியில் சென்றவர்களை தாக்கிய ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
Aubervilliers (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் இன்று ஜூன் 19, புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. வயது குறிப்பிடப்படாத நபர் ஒருவர் வீதிகளில் சென்றவரை கண்மூடித்தனமாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. tournevis கருவி மூலம் தாக்கியதாகவும், காவல்துறையினர் அழைக்கப்பட்டு குறித்த நபரைக் கைது செய்ய முற்பட்டபோது, நகரசபை காவல்துறையினர் அவரை துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும், 40 வயதுடைய அவர் வீடற்றவர் (SDF) எனவும் தெரிவிக்கப்படுகிறது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025