Paristamil Navigation Paristamil advert login

இம்மாத இறுதியில் முற்றுமுழுதாக திறக்கப்படும் A13 நெடுஞ்சாலை!

இம்மாத இறுதியில் முற்றுமுழுதாக திறக்கப்படும் A13 நெடுஞ்சாலை!

12 ஆனி 2024 புதன் 16:12 | பார்வைகள் : 13631


A13 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக வீதியின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளமை அறிந்ததே. தற்போது மிக விரைவாக திருத்தப்பணிகள் இடம்பெற்று வருகிறது.

ஜூன் 30 ஆம் திகதி A13 நெடுஞ்சாலை முற்று முழுதாக திறக்கப்பட்டுவிடும் என Haute-de-Seine மாவட்ட காவல்துறையினர் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.

குறித்த நெடுஞ்சாலை கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் இருபுறமும் மூடப்பட்டிருந்தது. பின்னர் மே 10 ஆம் திகதி பரிசை நோக்கிச் செல்லும் ஒரு பகுதி மட்டும் திறக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே ஜூன் 30 ஆம் திகதி வீதி முற்று முழுதாக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்