மரீன் லு பென்னுடன் நேரடி விவாதத்தை விரும்பாத மக்ரோன்..!
12 ஆனி 2024 புதன் 15:30 | பார்வைகள் : 4504
ஐந்தாம் குடியரசில் முன்னர் எப்போதும் இடம்பெறாத அரசியல் நிகழ்வுகள் தற்போது இடம்பெற்று வருகிறது. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் திடீர் பொதுத்தேர்தல் ஒன்றை அறிவித்துள்ளார்.
ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ஆம் திகதி ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக இந்த தேர்தல் இடம்பெற உள்ளது. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சட்டமன்றம் கலைக்கப்படுவதாக நான்கு நாட்களுக்கு முன்னர் அறிவித்தார்.
இந்நிலையில், இன்று ஜூன் 12 ஆம் திகதி புதன்கிழமை ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டார். அதன்போது, 'மரீன் லு பென்னுடன் நேரடி விவாதத்தில் ஈடுபடுவீர்களா?' என கேள்வி எழுப்பப்பட்டது.
அதன்போது, நேரடி விவாதம் ஒன்றை தாம் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
முன்னதாக 2022 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, மரீன் லு பென் மற்றும் இம்மானுவல் மக்ரோன் நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.