Essonne : உதவிக்கு வந்த தீயணைப்பு படையினரை தாக்கிய ஒருவர் கைது!
28 சித்திரை 2024 ஞாயிறு 12:48 | பார்வைகள் : 13453
உதவிக்கு வந்த தீயணைப்பு படையினர் மீது தாக்குதல் மேற்கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் Sainte-Geneviève-des-Bois (Essonne) நகரில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவருடைய கை துண்டிக்கப்பட்டதாக தீயணைப்பு படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, பிற்பகல் 4 மணி அளவில் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர்.
அங்கு 34 வயதுடைய ஒருவர் கைகளில் காயமடைந்து இரத்தம் வழிந்த நிலையில் இருந்துள்ளார். அவரது மனைவியுடன் சண்டையிட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்ததாகவும், அதன்போதே அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவருக்கு உதவ வந்த தீயணைப்பு படையினரை அவர் தாக்கியுள்ளார். மருத்துவர் மீது எச்சில் துப்பியுள்ளார். அதையடுத்து காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan