A13 நெடுஞ்சாலை திறப்பதில் சிக்கல்! - தாமதமாகலாம்..!
28 சித்திரை 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 9993
A13 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பிளவு காரணமாக வீதி மூடப்பட்டுள்ளமை அறிந்ததே. இந்நிலையில், மேலும் சில பிளவுகள் கண்டறியப்பட்டுள்ளதால், வீதி மீண்டும் திறக்கப்படுவதில் தாமதம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 1 ஆம் திகதி வீதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த நாளில் வீதி மீள திறக்கப்படாது என அறிய முடிகிறது. ஆனால் துல்லியமான திகதி அறிவிக்கப்படவில்லை.
A13 நெடுஞ்சாலையின் Vaucresson பகுதியில் இருந்து Porte de Saint-Cloud வரை கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளது. வீதியில் மிக நீளமான மற்றும் ஆழமான பிளவுகள் கண்டறியப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வீதி மூடப்பட்டது.
இந்நிலையில், மேலும் சில பிளவுகள் கண்டறியப்பட்டதை அடுத்து, வீதி திறக்கப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

























Bons Plans
Annuaire
Scan