பரிஸ் : இரு பெண்களை பாலியல் பலாத்காரம் மேற்கொண்ட அகதி கைது!!
28 பங்குனி 2024 வியாழன் 12:42 | பார்வைகள் : 12772
இரு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மாலி நாட்டைச் சேர்ந்த அகதி ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முதலாவது பலாத்கார சம்பவம் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் Porte d'Aubervilliers (19 ஆம் வட்டாரம்) பகுதியில் இடம்பெற்றுள்ளது. நள்ளிரவு நேரத்தில் வீதியில் நடந்து சென்ற 21 வயதுடைய பெண் ஒருவரை குறித்த நபர் பலாத்காரம் மேற்கொண்டுள்ளார்.
அதன்பின்னர், மூன்று ஆண்டுகளின் பின்னர், கடந்த மார்ச் 4 ஆம் திகதி 8 மாத கர்பிணி பெண் ஒருவர் Seine-et-Marne மாவட்டத்தின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் Porte de la Chapelle பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
பின்னர் மரபணு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த நபர் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டார்.
28 வயதுடைய மாலி நாட்டைச் சேர்ந்த அகதி ஒருவே மேற்படி இரண்டு பாலியல் பலாத்காரங்களை மேற்கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது. அவர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan