பரிஸ் : இடிந்து விழுந்த Moulin Rouge அரங்கின் முகப்பு!
25 சித்திரை 2024 வியாழன் 06:23 | பார்வைகள் : 19995
பரிசில் உள்ள பிரபல காபரே நடன அரங்கான Moulin Rouge இன் கூரை நேற்று இரவு இடிந்து விழுந்துள்ளது. முதல்கட்ட தகவல்களின் படி இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 2 மணியில் இருந்து 3 மணிக்குள்ளாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரங்கின் முகப்பு பக்கத்தில் இருந்த சிறகு உடைந்து விழுந்துள்ளதுடன், சிவப்பு நிறத்தில் மின் விளக்குகளான எழுத்துக்களில் MOU ஆகிய மூன்று எழுத்துக்களும் உடைந்து விழுந்துள்ளன.
உடைந்து விழுந்தமைக்குரிய காரணங்கள் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. அதிஷ்ட்டவசமாக பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan