ஒலிம்பிக் போட்டிகளின் போது பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட சிறுவன் கைது!
24 சித்திரை 2024 புதன் 17:48 | பார்வைகள் : 10178
16 வயதுடைய சிறுவன் ஒருவன் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் நாட்களில் பயங்கரவாத தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை குறித்த சிறுவன் Haute-Savoie நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுவன் வெடிகுண்டு நிறைந்த பட்டியை அணிந்து கூட்டத்துக்குள் சென்று வெடித்துச் சிதறி தற்கொலை தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் Telegram செயலியூடாக தயேஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவனது வீடும் சோதனையிடப்பட்டது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan