Nogent சுரங்கத்துக்குள் விபத்து! - இளம் பெண் பலி!

23 சித்திரை 2024 செவ்வாய் 19:07 | பார்வைகள் : 10065
A86 நெடுஞ்சாலையில் பயணித்த இளம் பெண் ஒருவர் விபத்துக்குள்ளாகி பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் tunnel de Nogent சுரங்கத்துக்குள் (Val-de-Marne) இன்று ஏப்ரல் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. 23 வயதுடைய பெண் ஒருவர் மகிழுந்தில் பயணித்த நிலையில், அவரது மகிழுந்து டயர் திடீரென வெடித்துள்ளது. அதையடுத்து அவர் மகிழுந்தை விட்டு இறங்கி, வீதியின் அருகே காத்திருந்த வேளையில், அவரை மற்றொரு மகிழுந்து மோதித்தள்ளியுள்ளது.
இவ்விபத்தில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
Mercedes SUV மகிழுந்தில் பயணித்த 64 வயதுடைய ஒருவரே விபத்தை ஏற்படுத்தியிருந்தார். உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு மதுபோதை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3