Valenciennes பகுதியில் உள்ள 'centre hospitalier' நிர்வாகமும், Toyota நிர்வாகமும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தியது.

23 சித்திரை 2024 செவ்வாய் 11:23 | பார்வைகள் : 9020
Valenciennes பகுதியில் உள்ள மத்திய மருத்துவ மனையின் உதவியோடு வாகன உற்பத்தி நிறுவனமான Toyota நிறுவனம் தங்களின் பணியாளர்களின் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தும் முயற்சியை மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் 2022ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சியானது இன்று தமக்கு வெற்றி அளித்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர். தங்கள் பணியாளர்களில் 160 பேர் குறித்த செயல் திட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர் எனவும் இவர்களில் 36% சதவீதத்தினர் முழுமையாக புகைப்பிடித்தலை நிறுத்தி விட்டார்கள் என்றும், 60% வீதமானோர் தமது புகைப்பிடித்தலை குறைத்துள்ளனர் எனவும் இன்றைய அறிவிப்பில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமது ஊழியர்கள் வேலை நேரத்தில் சம்பளத்தோடு குறித்த மருத்துவமனையின் உதவியை நாடி பல்வேறுபட்ட மருத்துவத்துறை ஆலோசனைகள், பயிற்சிகள் போன்றவற்றினால் இது சாத்தியமானது எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரான்சின் ஏனைய பகுதிகளுக்கும் தங்கள் ஊழியர்களுக்கான இத்தகைய சேவையை விரிவுபடுத்த விரும்புவதாக Toyota நிறுவனம் தெரிவித்துள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025