வேலை நிறுத்தம்! - 70% சதவீத விமான சேவைகள் பாதிப்பு!
22 சித்திரை 2024 திங்கள் 18:38 | பார்வைகள் : 9983
விமான சேவைகளின் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதை அடுத்து சேவைகள் பாதிக்கப்பட உள்ளது.
ஏப்ரல் 25 ஆம் திகதி வியாழக்கிழமை இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது. SNCTA எனும் தொழிற்சங்கமே இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளதால், கிட்டத்தட்ட 70% சதவீதமான விமான சேவைகள் பாதிப்புக்குள்ளாகும் என அறிய முடிகிறது.
உள்ளூர் மற்றும் சர்வதேச விமான சேவைகள் பாதிக்கப்படும் எனவும், நாளை செவ்வாய்க்கிழமை நண்பகலுக்குள்ளாக DGAC (பிரெஞ்சு விமான போக்குவரத்து இயக்குநரகம்) தரப்புக்கும் குறித்த தொழிற்சங்கத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan