விசேட செய்தி : மே மாதம் வரை மூடப்படும் A13!!
22 சித்திரை 2024 திங்கள் 17:55 | பார்வைகள் : 9258
A13 நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள வெடிப்பின் காரணமாக தடைப்பட்டுள்ள போக்குவரத்து, வரும் மே மாதம் 1 ஆம் திகதி புதன்கிழமை வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற வியாழக்கிழமை இரவு 11 மணியில் இருந்து மூடப்பட்டுள்ள A13 நெடுஞ்சாலையின் ஒரு பகுதி, நாளை ஏப்ரல் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திறக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது திகதி பிற்போடப்பட்டுள்ளது.
மே 1 ஆம் திகதி புதன்கிழமை வரை பரிசுக்குள் நுழைவதற்கு A13 நெடுஞ்சாலையை பயன்படுத்த முடியாது என இல் து பிரான்சின் சாலைகளுக்கான இயக்குநரகம் ( Direction interdépartemenale des routes d'Île-de-France) சற்று முன்னர் அறிவித்துள்ளது.
நெடுஞ்சாலையில் 50 தொடக்கம் 80 மீற்றர் வரை வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan