செல்பேசிக்காகக் கத்திக்குத்து!!
19 சித்திரை 2024 வெள்ளி 18:57 | பார்வைகள் : 12128
மார்செய் நகரில் செல்பேசிக்காகக் கத்திக்குத்துத் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.
நேற்று இரவு மார்செய் நகரின் 3வது பிராந்தியத்தில், மார்செய் நகரின் மாநகரசபை ஆலோசகர் மீது, ஒரு நபர், கத்தியால் பல குத்துக்கள் குத்திவிட்டு, அவரின் செல்பேசியையும் அவரின் பையையும் திருடிச் சென்றுள்ளான்.
இந்தப் பெண் மாநகரசபை ஆலோசகரிற்கு மார்பிலும் கைகளிலும் பலத்த கத்திக்குத்துக்கள் குத்தப்பட்டுள்ளன. இவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
ஆயுதத் தாக்குதலுடன் வன்முறையுடன் கூடிய இந்தத தாக்குதலின் விசாரணை சிறப்புக் காவற்துறையினரிடம் வழங்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan