Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : கத்தியால் குத்தப்பட்டு - ஒருவர் படுகாயம்! இருவர் கைது!!

பரிஸ் : கத்தியால் குத்தப்பட்டு - ஒருவர் படுகாயம்! இருவர் கைது!!

26 மாசி 2024 திங்கள் 19:24 | பார்வைகள் : 11445


பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை rue Piemontesi வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 3.30 மணி அளவில் வீதியில் நடந்து சென்ற குறித்த நபரை வழிமறித்த இரு கொள்ளையர்கள், குறித்த நபரை கத்தியால் தாக்கியுள்ளார். சரமாரியாக இந்த தாக்குதலில் அவர் நிலைகுலைந்து விழுந்தார்.

அவரிடம் இருந்த சில பொருட்களை திருடிக்கொண்டு அங்கிருந்து இரு கொள்ளையர்களும் தப்பி ஓடியுள்ளனர்.

பின்னர் மருத்துவக்குழு அழைக்கப்பட்டு தாக்குதலுக்கு இலக்கான நபர் Georges-Pompidou மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாக்குதல் மேற்கொண்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்