Paristamil Navigation Paristamil advert login

ஜனாதிபதி மாளிகைக்கு சிறப்பு விருந்தினராக Kylian Mbappé!!

ஜனாதிபதி மாளிகைக்கு சிறப்பு விருந்தினராக Kylian Mbappé!!

26 மாசி 2024 திங்கள் 19:14 | பார்வைகள் : 4214


உதைபந்தாட்ட வீரர் Kylian Mbappé நாளை செவ்வாய்க்கிழமை இரவு எலிசே மாளிகைக்கு சிறப்பு விருந்தினராக வருகை தர உள்ளார்.

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை சந்தித்து உரையாடி அவரோடு உணவு அருந்த உள்ளார். ஜனாதிபதிக்கும் எம்பாபேக்கும் நெருங்கிய உறவு உள்ளமை அறிந்ததே. பல தடவைகள் இருவரும் சந்தித்து உரையாடியுள்ளனர். உலகக்கிண்ண போட்டிகளைக் காண கட்டார் வரை பயணித்திருந்தார்.

இந்நிலையில், அவர் PGS கழகத்தில் இருந்து வெளியேறுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவருடன் நாளை இரவு உணவு அருந்துவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார். அதேவேளை கட்டார் நாட்டின் மன்னர் Nasser Al-Khelhaïfi பரிசுக்கு வருகை தர உள்ளார். அவர்கள் இருவரும் இணைந்து ஜனாதிபதி மக்ரோனுடன் இரவு உணவில் பங்கேற்பார்கள் என அறிய முடிகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்