உலகிலேயே எந்த நாட்டில் மலிவான Monthly Internet Pack உள்ளது தெரியுமா?
5 தை 2024 வெள்ளி 05:50 | பார்வைகள் : 10996
உலகிலேயே மலிவான இணையச் சேவை இந்தியாவில் உள்ளது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.
உலகின் இரண்டு நாடுகளில் மாதாந்திர இணைய கட்டணம் இந்தியாவை விட மலிவானது. இதில் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், இந்த இரண்டு நாடுகளும் போரில் ஈடுபட்டுவருகின்றன.
போரில் ஈடுபட்டுவரும் உக்ரைனும் ரஷ்யாவும் இந்தப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
Numbeo வெளியிட்டுள்ள தகவல்களின்படி, உக்ரைனில் ஒரு மாதத்திற்கு இணைய சேவைகளைப் பெற நீங்கள் 5.86 டொலர்கள் செலுத்த வேண்டும், ரஷ்யாவில் 6 டொலர்கள் செலவாகும்.
அதேசமயம், இந்தியாவில் 60MBPS அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் இணைய சேவைக்கு, நீங்கள் ஒவ்வொரு மாதமும் 8 டொலர்கள் செலவிட வேண்டும்.
மறுபுறம், உலகின் மிக விலையுயர்ந்த இணையம் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ளது. இங்கே நீங்கள் மாதத்திற்கு இணைய சேவைகளைப் பெற 102.18 டொலர் செலுத்த வேண்டும்.
இதையடுத்து, Saudi Arabia, United States of America, Canada, Australia, Norway, Germany மற்றும் SouthAfrica ஆகிய நாடுகளிலும் இணைய சேவைகள் மிகவும் விலை உயர்ந்தவையாக உள்ளது.
உக்ரைன், ரஷ்யா மற்றும் இந்தியாவுக்குப் பிறகு, ருமேனியாவில் மலிவான விலையில் இணையம் கிடைக்கிறது. ஒரு மாதத்திற்கு அங்கு இணைய சேவைகளை அனுபவிக்க, நீங்கள் $9.17 செலுத்த வேண்டும்.
Vietnamல் மாதாந்திர இணைய கட்டணம் $9.78, Turukiye $9.85, Nepal $10.01, Iran $10.34, Belarus $10.49 மற்றும் Egypt $10.88 செலவாகும்.
இலங்கையில் (Sri Lanka) ஒரு மாதத்திற்கு இணையத்தைப் பயன்படுத்த, நீங்கள் 12.12 டொலர் செலவிடவேண்டும். சீனாவில் $12.39, கசகஸ்தானில் $12.43, பல்கேரியாவில் $13.12 மற்றும் பாகிஸ்தானில் $14.68 செலுத்த வேண்டும். அதேபோல், அர்ஜென்டினாவில் $18.59 மற்றும் வங்கதேசத்தில் $18.90 செலுத்த வேண்டும்.
மிகவும் விலையுயர்ந்த மாதாந்திர இன்டர்நெட் பேக்கைப் பொறுத்தவரை, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அடுத்தபடியாக, சவுதி அரேபியா மிகவும் விலை உயர்ந்தது. அங்கு உங்களுக்கு $72.63 செலவாகும்.
அதேபோல், அமெரிக்காவில் $72.14, கனடாவில் $65.35, அவுஸ்திரேலியாவில் $59.42, நார்வேயில் $54.78, ஜேர்மனியில் $51.78, தென்னாப்பிரிக்காவில் $41.14, பிரித்தானியாவில் $38.38, வெனிசுலாவில் $37.77, ஸ்பெயினில் $35.14 செல்வாக்கும்.
ஜப்பானில் $34.14, பிரான்சில் $32.59, மெக்சிகோவில் $30.32, இத்தாலியில் $30.25, இந்தோனேசியாவில் $27.82, தென்னாப்பிரிக்காவில் $22.10, பிரேசிலில் $21.01 செல்வாக்கும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan