இலங்கையில் சகோதரனை சுட்டுக்கொலை செய்த இளைஞன்
17 புரட்டாசி 2024 செவ்வாய் 14:11 | பார்வைகள் : 1090
சகோதரர்களுக்கு இடையிலான மோதல் துப்பாக்கி சூட்டில் முடிவடைந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்பாறை , சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த பக்கீர் முகையதீன் றோஜான் (வயது 28) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சகோதரர்கள் இருவருக்கு இடையில் நீண்ட காலமாக முரண்பாடு நிலவி வந்த நிலையில் நேற்றைய தினமும் இருவரும் முரண்பட்டு கொண்டதாகவும், அதன் போது ஒருவர் மற்றையவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கி சூட்டினை நடாத்தியவரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.