பரிஸ் : தண்டவாளத்தில் தவறி விழுந்து ஒருவர் பலி!
17 புரட்டாசி 2024 செவ்வாய் 14:18 | பார்வைகள் : 2476
தொடருந்து தண்டவாளத்தில் தவறி விழுந்த ஒருவர் தொடருந்து மோதி பலியாகியுள்ளார். திங்கட்கிழமை இரவு இச்சம்பவம் பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது.
நேற்று நள்ளிரவுக்கு சற்று பின்னர் Stalingrad நிலையத்தில் வைத்து நபர் ஒருவர் தொடருந்து தண்டவாளத்தில் தவறி விழுந்துள்ளார். அவரால் உடனடியாக அதில் இருந்து எழுந்து மேலே வரமுடியவில்லை. அதற்குள்ளாக Mairie d'Ivry மற்றும் Villejuif - Louis Aragon நகரங்களுக்கிடையே பயணித்த மெற்றோ ஒன்றில் மோதுண்டு பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் தெளிவாக RATP நிலைய கமராவில் பதிவாகியுள்ளது.
சடலம் மீட்கப்பட்டது. இன்று காலை மீண்டும் போக்குவரத்து இயக்கப்பட்டது.