திருமணத்தை அறிவித்த சின்னத்திரை நட்சத்திர ஜோடி!
9 ஐப்பசி 2024 புதன் 07:17 | பார்வைகள் : 1101
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ தொடர். இந்த தொடரில் நடிக்கும் கதாபாத்திரங்களும் மக்கள் மத்தியில் பிரபலமாக வருகின்றனர்.
இந்த தொடரில் ‘முத்து’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பரிட்சயமானவர் நடிகர் வெற்றி வசந்த். இவருக்கு இதுதான் முதல் சீரியல். எனினும், இதில் தனக்கென அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள ‘முத்து’ கதாபாத்திரத்தை மக்கள் கொண்டாடிவருகின்றனர்.
இவர், தற்போது திருமணம் செய்யவுள்ளார். ‘ராஜா ராணி 2’வில் தனது நடிப்பினால் கவனம் ஈர்த்தவர் வைஷ்ணவி சுந்தர். அந்த தொடரில் கேரக்டர் ரோலில் நடித்துக் கொண்டிருந்த வைஷ்ணவி, ‘பொன்னி’ தொடரின் மூலம் நாயகியாக அறிமுகமாகி உள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரிய ரசிகர் பட்டாளம் கொண்டுள்ள வைஷ்ணவிதான் வெற்றி வசந்தை கரம் பிடிக்க இருக்கிறார்.
இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண செய்தியை உறுதிசெய்துள்ளனர். இரு வீட்டு பெரியவர்கள் முன்னிலையில் இந்த வாரம் திருமண நிச்சயதார்த்த நிகழ்வு சிம்பிளாக நடைபெற உள்ளதாம். தொடர்ந்து திருமணம் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளனர்.