சாச்சனா மீண்டும் பிக்பாஸில் என்ட்ரி கொடுக்கப்பாரா ?
9 ஐப்பசி 2024 புதன் 07:12 | பார்வைகள் : 1122
பிக்பாஸ் தமிழ் எட்டாவது சீசனை தொட்டுள்ளது. முந்தைய சீசன்களில் இல்லாத பல புதிய விஷயங்கள் இந்த சீசனில் இடம்பெற்றுள்ளன. இந்த சீசனில் வரிசையாக 18 பேர் பிக்பாஸின் வீட்டுக்குள் அனுப்பி வைத்த புதிய தொகுப்பாளர் விஜய் சேதுபதி, புதிய ட்விஸ்ட் ஒன்றையும் கொடுத்தார்.
பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக, பங்கேற்பாளர்களிலிருந்து ஒருவர், 24 மணி நேரத்தில் வெளியேற்றப்படவுள்ளார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஓபன் நாமினேஷன் மூலம் முதல் எலிமினேஷன் நடைபெற்றது.
அதிக நாமினேஷன் செய்யப்பட்டவர் என்ற முறையில், நடிகை சாச்சனா முதல் ஆளாக 24 மணி நேரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆனார். ஏழு சீசன்களாக இல்லாதவாறு இந்த முறை, ஆண்கள் vs பெண்கள் என பிரிக்கப்பட்டது. இந்த பிரிவே, சாச்சனா வெளியேற்றத்துக்கு காரணமாக அமைந்தது.
சாச்சனா கோப்பையை உடைத்து வெளியேறும்போது, “இந்த சீசனில் கோப்பையை நழுவ விட்டு விட்டீர்கள். இனி நீங்கள் வெளியே போகலாம்” என்று பிக்பாஸ் சொல்ல அங்கிருக்கும் போட்டியாளர்கள் எல்லோரும் கண்கலங்கினர். பிக்பாஸ் வீட்டில் மட்டுமில்லை, சாச்சனாவின் வெளியேற்றம் குறித்து வெளியிலும் ஒரே பேச்சுதான்.
இதற்கிடையே, சாச்சனாவின் எலிமினேஷனுக்கு பின்னணியில் பிக்பாஸின் பலே பிளான் உள்ளதாம். அதும் டிஆர்பி தான் வேறு என்ன இருக்க முடியும். அதாவது, டிவி நிகழ்ச்சிகளின் டிஆர்பி ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமையன்றுதான் வெளிவரும்.
விஜய் சேதுபதி இம்முறை முதல்முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அவரின் அறிமுக எபிசோடுக்கு வரவேற்பு எப்படி, டிஆர்பி ரேட்டிங் என்பதை வருகிற வெள்ளிக்கிழமை தான் பார்க்க முடியும் என்பதால், அதற்கு முன்னதாகவே எதாவது செய்யலாம் என்பதற்காக முதல் 24 மணி நேர எவிக்ஷனை நடத்தியிருக்கிறதாம் பிக்பாஸ் டீம்.
சாச்சனா மிக விரைவில் திரும்பவும் நிகழ்ச்சிக்குள் வந்தாலும் வரலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை அர்ச்சனா வைல்டு கார்டு என்ட்ரி மூலம் கோப்பை வென்றார். அதேபோல், சாச்சனாவும் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் விரைவில் திரும்பவும் நிகழ்ச்சிக்குள் வரலாம் என்கிறது ஒரு தரப்பு.