மனிதாபிமான உதவி... 27 தொன் பொருட்களுடன் லெபனானுக்கு புறப்பட உள்ள விமானம்!
9 ஐப்பசி 2024 புதன் 10:00 | பார்வைகள் : 2290
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட லெபனான் மக்களுக்கு மனிதாபிமான உதவிப்பொருட்களை பிரான்ஸ் வழங்க உள்ளது. மொத்தமாக 27 தொன் எடையுள்ள உணவுகள், மருத்துவப் பொருட்கள் போன்றவற்றை பிரான்ஸ் வழங்க உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
போர்வைகள், படங்குகள், கிருமிநாசினிப்பொருட்கள், மருந்துகள், உலர் உணவுகள் போன்ற அவசரகால தேவையுடைய பொருட்கள் அனுப்பப்பட உள்ளன. பிரான்சில் இருந்து இந்த பொருட்கள் தனி விமானம் ஒன்றில் இன்று ஒக்டோபர் 10, புதன்கிழமை மாலை புறப்பட உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
லெபனானைச் சேர்ந்த செஞ்சிலுவைச் சங்கம், லெபனான் சுகாதார நிறுவனம், சில உள்ளூர் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்த பொருட்கள் விநியோகிக்கப்பட உள்ளதாகவும், அனுப்பப்படும் பொருட்களில் கட்டார் நாட்டின் பங்கும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.