பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் சாவு!!
7 ஆவணி 2024 புதன் 18:58 | பார்வைகள் : 2857
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான பத்ரிஸ் லாபொன் (Patrice Laffont) தனது 84வது வயதில் மாரடைப்பால் இன்று சாவடைந்துள்ளார்.
இவர் பிரபல நிகழ்ச்சிகளான «Fort Boyard», «Pyramide», போன்ற பிரபல நிகழ்ச்சிகளையும் மேலும் பல நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கி உள்ளார்.
ஜனாதிபதி எமானுவல் மக்ரோன், கலாச்சார அமைச்சர் ரசிதா தாத்தி மற்றும் பல பிரபலங்கள் இவரின் சாவிற்கு இரங்கல்கள் தெரிவித்துடன், இவர் பிரான்ஸ் தொலைக்காட்சிகளின் அடையாளம் எனவும் தெரிவித்துள்ளனர்.