Paristamil Navigation Paristamil advert login

தந்தையையும் மகனையும் தேடும் ஜோந்தார்ம்!! பொதுமக்களிடம் உதவி!!

தந்தையையும் மகனையும் தேடும் ஜோந்தார்ம்!! பொதுமக்களிடம் உதவி!!

7 ஆவணி 2024 புதன் 18:37 | பார்வைகள் : 3555


இஸேர் (Isère) மாவட்டத்தின் ஜோந்தார்மினர் ஒரு தந்தையயையும் மகனையும் தீவிரமாகத் தேடிவருகின்றனர். இதற்கான உதவியைப் பொதுமக்களிடமும் கோரி உள்ளனர்.

30 வயதுகளில் உள்ள நிக்கோலா எபோசிதோ (Nicolas Esposito) மீது சர்வதேசப் பிடியாணை இன்டர்போலினால் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான பாலியல் வண்புனர்விற்காக இவர் மீது சர்வதேசப் பிடியாணை உள்ளது.

இவரும், 15 வயதுடைய இவரது மகன் லூ-பிரியோன் எபோசித்தோ ( Lou Brian Esposito)வும் ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் தலைமறைவாகி உள்ளனர்.
இவரது மகன் உடல்நலம் குன்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரையும் கண்டால் உடனடியாக 0800 200 142 எனும் இலக்கத்திற்கு உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு ஜோந்தார்மினர் தெரிவித்துள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்