Paristamil Navigation Paristamil advert login

மகளிர் உதவி தொகைக்கு மட்டும் நிதி இருக்கா? : உச்சநீதிமன்றம் கேள்வி

மகளிர் உதவி தொகைக்கு மட்டும் நிதி இருக்கா? : உச்சநீதிமன்றம் கேள்வி

8 ஆவணி 2024 வியாழன் 02:59 | பார்வைகள் : 713


மகளிர் உதவித்தொகை போன்ற இலவச திட்டத்திற்கு நிதி இருக்கு... ஆனால் நிலத்தை இழந்தவர்களுக்கு இழப்பீடு தர நிதி இல்லையா என மஹாராஷ்டிராவில் சிவசோனா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மஹாராஷ்டிராவில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் ஆராய்ச்சி அமைப்பு ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஜூலை 13-ம் தேதி நிலத்தை அவர்களிடமே ஒப்படைக்க அல்லது நிலத்தை இழந்தவர்களுக்கு மாநில அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்யாததால், நேற்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறியது,

மகளிர் உதவித்தொகை போன்ற இலவச திட்டத்திற்கு மாநில அரசிடம் நிதி இருக்கு ஆனா நிலத்தை இழந்தவர்களுக்கு இழப்பீடு தொகை கொடுக்க நிதி இல்லையா ?

நீதிமன்றத்தின் உத்தரவை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.இதற்கு உரிய பதில் தாக்கல் செய்ய வேண்டும் இல்லையெனில் தலைமை செயலரை வரவழைக்க நேரிடும். இவ்வாறு கூறிய நீதிபதிகள் ஆக.13-ம் தேதி வழக்கை ஒத்தி வைத்தனர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்