பிரியா பவானி ஷங்கர் திருமணம் எப்போது ?
7 ஆவணி 2024 புதன் 13:10 | பார்வைகள் : 627
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு தாவி ஹீரோயினாக வெற்றி பெறும் நடிகைகள் ஒரு சிலரே. அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து, பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கல்யாண முதல் காதல் வரை' சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் பிரியா பவானி ஷங்கர்.
இந்த சீரியல் மூலம் இவருக்கு கிடைத்த பிரபலத்தை பயன்படுத்திக் கொண்டு, அதிரடியாக இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளியான 'மேயாத மான்' திரைப்படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்தார். இந்த திரைப்படம் ப்ரியா பவானி சங்கருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. இதைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஹாஸ்டல், யானை, ஓ மணப்பெண்ணே, திருச்சிற்றம்பலம், என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.
சமீபத்தில் வெளியான 'இந்தியன் 2' படத்திலும் பிரியா பவானி ஷங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ள டிமான்டி காலனி திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவரின் கைவசம் அரை டஜனுக்கும் மிகாமல் திரைப்படங்கள் உள்ள நிலையில், திருமண வயதை எட்டிய பின்னரும் இவர் ஏன்? தன்னுடைய நீண்ட நாள் காதலரை கரம் பிடிக்கவில்லை என்கிற கேள்வி தொடர்ந்து உலா வந்து கொண்டிருக்கிறது.
காதலருடன் டேட்டிங் செய்வதில் ஆர்வம் காட்டும் ப்ரியா பவானி ஷங்கர் அண்மையில் அர்ச்சனா பங்கேற்ற பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அர்ச்சனா திருமணம் எப்போது என பிரியா பவானி சங்கரிடம் கேள்வி எழுப்ப, பண்ணனும் என கூறிய... கொஞ்சம் இழுத்தபடி, உண்மையில் திருமணம் தாமதம் ஆகி கொண்டிருப்பதற்கு காரணம் சோம்பேறி தனம் தான். வெட்டிங் பிளான் பண்ணனும், பர்ச்சஸ் போன்ற பல வேலைகள் இருக்கு. ஒரு வேலை காலேஜ் முடிச்ச உடனே திருமணம் செஞ்சு வைங்கன்னு சொல்லி இருந்தா இந்நேரம் முடிஞ்சிருக்கும்னு நினைக்கிறன் என கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரியா பவானி ஷங்கர் எப்படியும் அடுத்தாண்டு திருமணம் செய்து கொள்ள பிளான் செய்துள்ளதாகவும் அதை முதல் முறையாக இப்போதுதான் நான் கூறுகிறேன் என இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். எனவே பிரியா பவானி ஷங்கருக்கு 2025-ஆம் ஆண்டு திருமணம் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
மேலும் தன்னுடைய காதலர் குறித்து அந்த பேட்டியில் பிரியா பவானி ஷங்கர் கூறுகையில், தன்னுடைய வாழ்க்கையில் ராஜ் கிடைத்ததற்கு நான் மிகவும் ஆசீர்வதிக்க பட்டிருக்க வேண்டும். அவர் இல்லை என்றால் நான் இப்போதும் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் ஃபேமிலி பெண்ணாக தான் இருந்திருப்பேன். அவர் கொடுத்த ஊக்கம் தான் என்னை இந்த அளவுக்கு வளர வைத்துள்ளது. அதேபோல் தன்னிடம் கோபமாக இருக்கும் போது என் அம்மா சிலமுறை நீ மட்டும் அந்த பையன விட்டுட்டேன்னா நீ என் மூஞ்சிலேயே முழிக்காத. நான் அந்த பையன் கூட போயி அவங்க வீட்டிலேயே தங்கிடுவேன் என சொல்லுவாங்க என தெரிவித்துள்ளார்.