Paristamil Navigation Paristamil advert login

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீரர் தகுதி நீக்கம்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீரர் தகுதி நீக்கம்

7 ஆவணி 2024 புதன் 14:40 | பார்வைகள் : 1918


பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் குழு 2 அரையிறுதி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அருண தர்ஷன 5 ஆவது இடத்தை பெற்றுக் கொண்டார்.

இலங்கை நேரப்படி நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில், ஓடுபாதை அத்துமீறலுக்காக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த போட்டி உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 11.05 மணிக்கு இடம்பெற்றது.

அருண தர்ஷன போட்டித் தூரத்தை 44.75 செக்கன்களில் முடித்து 5 ஆவது இடத்தை பெற்றுக் கொண்டார்.

இது அவரது தனிப்பட்ட சிறந்த ஓட்டமாக பதிவாகியிருந்த நிலையில், ஓடுபாதை அத்துமீறலுக்காக அவர் தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்