பிக்பாஸ் சீசன் 8நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார்?
7 ஆவணி 2024 புதன் 13:06 | பார்வைகள் : 951
பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஏழு சீசன்களாக தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசன் எட்டாவது சீசனை தொகுத்து வழங்க இயலாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதை அடுத்து அடுத்த சீசனின் தொகுப்பாளர் யார் என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் விஜய் டிவி தரப்பில் இருந்து சில நட்சத்திரங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சூர்யா, விஜய் சேதுபதி, சிம்பு உள்பட சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இறுதி கட்டமாக நான்கு பேர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த நால்வரில் ஒருவர் தான் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் சிம்பு, அரவிந்த்சாமி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர்களில் ஒருவர் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
இதில் சிம்பு மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவரும் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அனுபவமுள்ளவர்கள் என்பதும் அதேபோல் பிரகாஷ்ராஜ் மற்றும் அரவிந்த் சாமி ஆகிய இருவரும் ’நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை இந்த நால்வரில் ஒருவர் தொகுத்து வழங்குவார்களா? அல்லது வேறு யார் தொகுத்து வழங்குவார்கள் என்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே உறுதி செய்ய முடியும்.