Paristamil Navigation Paristamil advert login

ஜவ்வரிசி போண்டா

ஜவ்வரிசி போண்டா

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9965


 மாலை வேளையில் மழை வரும் நேரத்தில் சூடாக ஏதேனும் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் போல் தோன்றும். அதற்கு பஜ்ஜி, போண்டா தான் சிறந்தது. அதிலும் போண்டா தான் அட்டகாசமாக இருக்கும். இந்த போண்டாவில் பல வெடிரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஜவ்வரிசி போண்டா.இந்த போண்டா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். மேலும் குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது அந்த ஜவ்வரிசி போண்டாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

 
தேவையான பொருட்கள்:
 
ஜவ்வரிசி - 5 டேபிள் ஸ்பூன்
உருளைக்கிழங்கு - 4
இஞ்சி பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
கடலை மாவு - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
 
செய்முறை:
 
முதலில் ஜவ்வரிசியை வெதுவெதுப்பான நீரில் 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். அதற்குள் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு வேக வைத்து, தோலுரித்து, மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின்னர் ஜவ்வரிசியில் உள்ள நீரை முற்றிலும் வடித்துவிட்டு, பின் அதில் மசித்த உருளைக்கிழங்கு, இஞ்சி பேஸ்ட், மிளகாய் பேஸ்ட், சீரகப் பொடி, மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
 
விருப்பமிருந்தால், அதில் 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து பிசைந்து, அத்துடன் கடலை மாவு சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
 
பிறகு அதனை எலுமிச்சை அளவு உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
 
இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், ஜவ்வரிசி போண்டா ரெடி!!!
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்