Magnanville தாக்குதல் - பயங்கரவாதியின் சகோதரன் கைது - வழக்கறிஞருக்கு எச்சரிக்கை!
15 ஐப்பசி 2023 ஞாயிறு 07:27 | பார்வைகள் : 11864
காவல்துறை தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் அச்சுறுத்தல் விடுத்த பயங்கரவாதியின் சகோதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Mohamed Lamine Aberouz எனும் ஒருவரே சனிக்கிழமை காலை Limay (Yvelines) நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஒட்டுமொத்த பிரான்சையும் உலுக்கிய Magnanville பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டிருந்த Mohamed Lamine Aberouz இன் சகோதரன் ஆவார். மேற்படி தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிக்கு ஆயுள் தண்டனை கடந்த வாரம் விதிக்கப்பட்டது. அதையடுத்து வழக்கை வாதாடிய வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டது.
இந்த எச்சரிக்கையை விடுத்த, பயங்கரவாதியின் சகோதரன் Mohamed Lamine Aberouz என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, மேற்படி பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்ற போதும் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார். விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan