Arras தாக்குதல் - பாடசாலைக்கு கொல்லப்பட்ட ஆசிரியரின் பெயர்..??
16 ஐப்பசி 2023 திங்கள் 20:00 | பார்வைகள் : 14437
பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஆசிரியர் Dominique Bernard இன் பெயரை அவர் கற்பித்த பாடசாலைக்கு சூட்டுவதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகிறது.
முன்னாள் மாணவன் ஒருவனால் தாக்குதலுக்கு இலக்காகி பலியான ஆசிரியர் Dominique Bernard இன் பெயரினை அவர் கற்பித்த Gambetta உயர்கல்வி பாடசாலைக்கு சூட்டுவதற்குரிய பேச்சுவார்த்தை பாடசாலை மட்டத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
பல்வேறு பொதுமக்களும் இந்தற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Arras நகர முதல்வர் Frédérique Leturque, இது தொடர்பாக தெரிவிக்கையில், “Dominique Bernard இன் நினைவுகளை நாம் அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறோம். அவரது பாடசாலைக்கு அவரது பெயரினையே சூட்டுவதை நான் விரும்புகிறேன்!” என தெரிவித்தார்.
**
20 வயதுடைய குறித்த பாடசாலையின் முன்னாள் மாணவன் ஒருவன், கடந்த வெள்ளிக்கிழமை காலை குறித்த ஆசிரியரை தாக்கியிருந்தான். 57 வயதுடைய ஆசிரியர் கழுத்தில் வெட்டப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
இரஷ்யாவில் பிறந்த குறித்த தாக்குதலாளி கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan