பலஸ்தீனத்திற்கான உதவியை நிறுத்தமாட்டோம் - பிரான்ஸ்!

10 ஐப்பசி 2023 செவ்வாய் 07:31 | பார்வைகள் : 11619
இஸ்ரேலிற்கெதிரான போர், நாம் பலஸ்தீனத்திற்குச் செய்யும் உதவிகளை நிறுத்தமாட்டாது. பலஸ்தீனத்திற்கான உதவிகள் தொடரும் என ஐரோப்பிய ஆணயத்திற்கு பிரான்சின் வெளியுறவு அமைச்சுத் தெரிவித்துள்ளது.
«எமது பலஸ்தீனத்திற்கான உதவிகள் நேரடியாக பலஸ்தீன மக்களையே சென்றடைகின்றன. சுத்தமான குடிநீர், மருத்துவம், சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, கல்வி என எமது உதவிகள் ஐ.நாவின் பொறிமுறை மூலம் சென்றடைகின்றன»
«இந்த உதவிகள் பிரான்சின் முக்கிய கடமையாகும். இதில் நாம் உறுதியாக உள்ளோம்»
என பிரான்சின் வெளிவிகார அமைச்சர் கத்தெரின் கொலோனா (Catherine Colonna) தெரிவித்துள்ளார்.