Paristamil Navigation Paristamil advert login

இந்திய கிரிக்கெட் அணியின் காவி நிற ஜெர்சி

இந்திய கிரிக்கெட் அணியின் காவி நிற ஜெர்சி

6 ஐப்பசி 2023 வெள்ளி 09:00 | பார்வைகள் : 6162


இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் காவி நிற ஜெர்சி-யில் இன்று பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.

உலக கோப்பை தொடர் கோலாகலமாக அஹமதாபாத்தில் நேற்று தொடங்கியது. இதில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை 9 விக்கெட் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி அக்டோபர் 8ம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு பயிற்சிக்காக வந்த இந்திய கிரிக்கெட் அணி முழுமையான காவி நிறம் கொண்ட புதிய ஜெர்சியில் காணப்பட்டனர்.


இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதுடன், ரசிகர்கள் மத்தியில் சில விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்