கனடாவில் உணவு விலைகளில் அதிகரிப்பு... சிரமங்களுக்கு முகம் கொடுக்கும் மக்கள்
.jpeg)
6 ஐப்பசி 2023 வெள்ளி 08:49 | பார்வைகள் : 8827
கனடாவில் உணவுப் பொருட்களுக்கான விலை அதிகரித்து வருகின்றது.
இதன் காரணத்தினால் பெரும்பான்மையான மக்கள் போஷாக்கான உணவுகளை கைவிட நேரிட்டுள்ளது.
அண்மையில் கருத்துக்கணிப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
ஹாலிபிக்ஸில் அமைந்துள்ள Dalhousie பல்கலைக்கழகத்தின் உணவு விவசாய ஆய்வு நிறுவனம் இந்த ஆய்வினை முன்னெடுத்துள்ளது.
அனேகமான குறிப்பாக அரைவாசிக்கும் மேற்பட்ட கனடியர்கள் போசாக்கான அல்லது ஊட்டச்சத்துடைய உணவு பொருட்களை விடவும் உணவுப் பொருட்களின் விலையின் அடிப்படையில் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
போஷாக்கான உணவுகளை விட்டுக் கொடுப்பதனால் நீண்ட காலத்தில் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும் என்ற கரிசனை உண்டு என கருத்துக்கணிப்பில் பங்கு பற்றிய 63 விதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
இறைச்சி வகைகளின் விலை அதிகரிப்பு காரணமாக கருத்துக்கணிப்பில் பங்கேற்ற சுமார் 50 வீதமானவர்கள் இறைச்சி நுகர்வினை அல்லது புரதச்சத்து நுகர்வினை குறைத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மலிவு விற்பனை அல்லது விலை கழிவுடைய கடைகளில் கொள்வனவு செய்வதற்கு கனடியர்கள் அதிக நாட்டம் காட்டி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025