Quiévrechain சிறார் சிறைச்சாலையில் இருந்து இரு இளம் கைதிகள் தப்பியோட்டம்.
2 ஐப்பசி 2023 திங்கள் 17:37 | பார்வைகள் : 8212
பிரான்சின் வடபகுதியில் அமைந்துள்ள Quiévrechain சிறார் சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இரு இளம் கைதிகள் சிறைச்சாலையின் கம்பிகளை அறுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என குறித்த சிறைச்சாலையின் CGT செயலாளர் Christophe Lecuyer தெரிவித்துள்ளார்.
தப்பிச்சென்ற இரு கைதிகளும் துப்பாக்கி முனையில் பாலியல் வன்முறை புரிந்தனர் மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டனர் எனும் குற்றங்களுக்காக சந்தேகிக்கப்பட்டு விசாரணைக்காக சிறையில் காத்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்பிச் சென்றவர்கள், அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்தவர்கள் மீது தாக்குதல்களை நடத்தக்கூடும், எனவே அவர்களை தேடிப்பிடித்து கைது செய்யும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இருவரும் கைதுசெய்யப்படும் நிலையில், அவர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றத்தைவிட சிறைச்சாலை கம்பிகளை அறுத்து வெளியேறிய குற்றத்திற்காக பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 150.000 euros அபராதமும் விதிக்கப்படும் என Lille அரச வழக்கறிஞர் மன்றம் அறிவித்துள்ளது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan