எச்சரிக்கை! 15 வயதுச் சிறுமியைக் காணவில்லை! தேடுதல் வேட்டை ஆரம்பம்!!

26 புரட்டாசி 2023 செவ்வாய் 18:04 | பார்வைகள் : 14520
Bas-Rhin இலிருக்கும் Plaine எனும் பகுதியில் 15 வயதுடைய லீனா எனும் பதின்ம வயதுச் சிறுமி காணாமற்போயுள்ளார்.
இவரது வீட்டிலிருந்து 3 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள Saint-Blaise-la-Roche தொடருந்து நிலையத்திலிருந்து கடந்த சனிக்கிழமை நடந்து வீட்டிற்கு வந்திருக்க வேண்டியவர் வந்து சேர்ந்திருக்கவில்லை.
அன்றிலிருந்து எந்தத் தகவல்களும் இவர் பற்றிப் பெற்றோரிற்குக் கிடைக்கவில்லை.
ஜோந்தார்மினர் சகலவிதமான காரணங்களையும் ஒதுக்கித்தள்ளாமல் தேடுதல் வேட்டை நடாத்தி வருகின்றது.
தற்போதைக்கு இவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்பதை மட்டும் ஒதுக்கி விட்டு, முதற்கட்டமாக வன்முறைகள் ஏதும் நடாத்தப்பட்டுள்ளதா என்ற நோக்கில் தேடிவருகின்றனர்.
யாராவது, கடத்தல் தொடர்பாக, வன்முறை தொடர்பாகத் தகவல் தெரிந்தால், அல்லது லீனாவை எங்காவது கண்டிருந்தால், உடனடியாகத் தகவல் தருமாறு ஜோந்தார்மினர் கோரி உள்ளனர்.
11h22 மணிவரை இயங்கிய இவரது செல்பேசி அதன் பின்னர் தெடர்பற்றுப் போயுள்ளது. இது பற்றிய எந்தத் தகவல்களும் நிபுணர்களிற்கு இன்னமும் கிடைக்கவில்லை எனவும், எந்த முறையில் தேடுதல் வேட்டை நடாத்தவேண்டும் என்றும் இன்னமும் தெரியவில்லை எனவும் தேசிய ஜோந்தார்மினரின் பேசவல்லவர் தெரிவித்துள்ளார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025