Paristamil Navigation Paristamil advert login

எட்டாம் இலக்க மெற்றோவில் மூட்டைப்பூச்சி தொல்லை!

எட்டாம் இலக்க மெற்றோவில் மூட்டைப்பூச்சி தொல்லை!

28 புரட்டாசி 2023 வியாழன் 15:30 | பார்வைகள் : 10903


எட்டாம் இலக்க மெற்றோ ஒன்றின் சாரதி ஒருவர் மூட்டைப்பூச்சி கடிக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று புதன்கிழமை குறித்த சாரதி, தமது கட்டுப்பாட்டு அறையில் மூட்டைப் பூச்சி இருப்பதைக் கண்டறிந்ததாகவும், மூட்டைப் பூச்சி கடிக்கு ஆளானதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இத்தகவலை தொடருந்து நிறுவனமான RATP உறுதி செய்துள்ளது. 

தொடருந்து சாரதிகளுக்கான தொழிற்சங்கம் இது குறித்து RATP நிறுவனத்திடம் விளக்கம் கோரியுள்ளது. மூட்டைப் பூச்சிகளுக்கான சுத்திகரிப்பு பணியை மேற்கொள்ளுமாறு தொடருந்து நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். 

பரிசில் முன்னதாக, அரங்குகளிலும், திரையரங்குகளிலும் இதுபோன்ற மூட்டைப் பூச்சி தொல்லை குறித்து விமர்சிக்கப்பட்டது. தற்போது மெற்றோவிலும் இது தொடர்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்