மக்ரோனின் அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம்!

28 புரட்டாசி 2023 வியாழன் 08:33 | பார்வைகள் : 13470
பிரதமர் Élisabeth Borne நேற்றைய தினம் 49.3 எனும் அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தி 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை நிறைவேற்றியிருந்தார். அரசாங்கம் குறுக்குவழியில் செயற்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு, அதன் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் (motion de censure) கொண்டுவரப்பட்டுள்ளது.
தீவிர இடதுசாரியான La France insoumise கட்சியின் தலைவர் Mathilde Panot, இதனை நேற்று இரவு அறிவித்தார். தீவிர இடதுசாரி கூட்டணிக் கட்சிகளின் (Nupes) சார்பாகவும், தமது கட்சியின் சார்பாகவும் இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
“சமூக மற்றும் சூழலியல் முறைகேடுகளை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது!” எனவும் அவர் தெரிவித்தார்.
49.3 எனும் அரசியலமைப்பு சட்டமூலமானது, பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி சட்டம் ஒன்றை அரசாங்கம் நிறைவேற்றுவதற்கான வழியாகும். அவசரகாலத்தின் போது மேற்கொள்ளப்படும் இந்த வழியினை பிரதமர் Élisabeth Borne பல தடவைகள் பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1