Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்சு தூதர் Niger இல் இருந்து வெளியேறினார்!

பிரெஞ்சு தூதர் Niger இல் இருந்து வெளியேறினார்!

27 புரட்டாசி 2023 புதன் 12:50 | பார்வைகள் : 17930


Niger நாட்டில் இருந்து பிரெஞ்சு தூதர் Sylvain Itté இன்று புதன்கிழமை வெளியேறினார். Niger இல் ஆட்சிக்கவிழ்ப்பு இடம்பெற்றதை அடுத்து, இராணுவத்தினர் அங்கு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். அதையடுத்தே இந்த வெளியேற்றம் இடம்பெற்றுள்ளது.

Niger இன் தலைநகர் Niamey இனை ஜூலை மாத இறுதியில் புரட்சிப்படையினர் கைப்பற்றினர். அந்நாட்டின் ஜனாதிபதி சிறைப்பிடிக்கப்பட்டார். இந்நிலையில், அங்குள்ள பிரெஞ்சு இராணுவத்தினரை வெளியேறும் படியும், தூதரகத்தை மூடும் படியும் அறிவுறுத்தினர். முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த பிரான்ஸ், பின்னர் அங்கு தொடர்ச்சியாக வலுக்கும் எதிர்ப்பை அடுத்து, முடிவை பின்வாங்கியது.

இரு நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தொலைக்காட்சி வாயிலாக வழங்கிய உரையின் போது, Niger இல் உள்ள பிரெஞ்சு தூதுவரை அழைக்கும் முடிவை பிரான்ஸ் எட்டியிருந்ததாக அறிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே, இன்று புதன்கிழமை நண்பகல் பிரெஞ்சு தூதுவர் Sylvain Itté, அங்கிருந்து பிரான்சுக்கு புறப்பட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்