Paristamil Navigation Paristamil advert login

ஓடும் மெட்ரோவில் ஏறி சாகசம் -விபத்து - உயிராபத்தில் இளைஞன்!!

ஓடும் மெட்ரோவில் ஏறி சாகசம் -விபத்து - உயிராபத்தில் இளைஞன்!!

24 புரட்டாசி 2023 ஞாயிறு 14:58 | பார்வைகள் : 18799


சற்று முன்னதாக 15h00 மணியளவில் ஓடிக்கொண்டிருக்கும் மெட்ரோவின் கூரையில் ஏறி சாகசம் புரியும் மிகவும் மோசமான ஒரு பழக்கமான '"train-surfing"' செய்ய முயன்ற 16 வயதுடைய பதின்ம வயது இளைஞன் விபத்திற்கு உள்ளாகி சாவுடன் போராடிக் கொண்டுள்ளான்.

6ம் இலக்க மெடரோவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

முதற்கட்டத் தகவலின் படி மெட்ரோக் கதவினைத் திறக்கும் சதுர வடிவான சாவி மூலம் கதவினைத் திறந்து, ஓடிக்கெண்டிருக்கும் மெட்ரோவின் மேற்பகுதிக் கூரையில் ஏறி உள்ளான். குகைப் பகுதிக்குள் மெட்ரோ சென்றபோது தவறி வீழ்ந்து படுகாயமுற்று நினைவு தவறி உள்ளான்

உடனடியாக கண்காணிப்புக் கமராவில் விபத்து அவதானிக்கப்பட்மையால், அங்கிருந்து உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளான்.

இவரின் உயிர் பெரும் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியான மோசமான சாகசங்கள், டிக்கெடாக் போன்றவற்றில் பகிரப்படுவதால், இப்படியான மிகமோசமான உயிராபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்