மொன்பர்னாஸ் - பெரும் போக்குவரத்துத் தடை!!

24 புரட்டாசி 2023 ஞாயிறு 14:33 | பார்வைகள் : 12826
மொன்பர்னாஸ் தொடருந்து நிலையத்தில் (Gare Montparnasse) பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பிரான்சின் தென்மேற்குப் பகுதிகளிற்கான தொடருந்துகள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளன.
மொன்பர்னாசிற்கு வரும் மற்றும் மொன்பர்னாசிலிருந்து புறப்படும் தொடருந்துகளிற்கு 30 நிமிடத்திலிருந்து 5 மணித்தியாலங்கள் வரையான தாமதம் ஏற்படுகின்றது.
மசி பலெசோ (Massy-Palaiseau - Essonne) அருகில் ஏற்பட்டுள்ள மின் பழுதின் காரணமாக இந்தத் தாமதங்களும் இடையூறுகளும் எற்பட்டுள்ளதாக SNCF அறிவித்துள்ளது.
திருத்த வேலைகள் ஆரம்பமாகியிருந்தாலும் இன்றிரவு வரை பெரும் தாமதம் ஏற்படும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025