Paristamil Navigation Paristamil advert login

ஆவிகள் ஏன் கேமராவில் மட்டும் சிக்குகின்றன தெரியுமா??

ஆவிகள் ஏன் கேமராவில் மட்டும் சிக்குகின்றன தெரியுமா??

27 வைகாசி 2018 ஞாயிறு 10:36 | பார்வைகள் : 11976


பலருக்கு ஆவிகள் பேய்கள் என்றால் பயம் உண்டு. ஆனால், பெரும்பாலும் ஆவிகள் கேமராக்கலில் ஏன் சிக்குகின்றன என்ற கேள்வி பெரும்பாலும் அனைவரின் மனதில் இருப்பதுதான். 
 
பழைய காலத்து ப்லிம் கேமிரா முதல் தற்போதைய ஸ்மார்ட்போன் கேமிரா வரை இது பொதுவான ஒன்றுதான். கேமராவின் ஆவிகள் ஏன் சிக்குகின்றன என்பதை பார்ப்போம்...
 
இமேஜ் அலியசிங் (image aliasing) எனபது புகைப்பட சிதைவு மற்றும் புகைப்பட தகவலை பதிவு செய்யும் கேமிரா சென்சார் எடுத்துக்கொள்ளும் நேரம் ஆகியவைகளில் ஏற்படும் கோளாறுகள் ஆகும். இதன் காரணமாக பேய் போன்ற உருவங்கள் தோன்றக்கூடும்.
 
ஸ்டீரியோஸ்கோபி மாயையை உருவாக்கும் அல்லது மேம்படுத்தும் ஒரு தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஆவிகள் மற்றும் பேய்கள் போன்ற உருவங்கள் சிக்குவது வழக்கமானது தான்.
 
டபுள் எக்ஸ்போஷர் எனப்படும் சிறப்பு விளைவை உருவாக்க வேண்டுமென்று எடுக்கப்படும் புகைப்படங்களிலும் ஆவிகள் மற்றும் பேய்களை உருவாக்கலாம்.
 
இதற்காக உண்மையில் பேய்கள் மற்றும் அமானுஷ்ய சக்திகள் இல்லை என கூறிவிட முடியாது. ஆனால் தொழில்நுட்பங்களால் இது போன்ற அமானுஷ்யங்களை உருவாக்க முடியும்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்