Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

சக்தி வாய்ந்த, எலிசபெத் மகாராணி பற்றி, நீங்கள் அறிந்திராத விடயங்கள்..!!

சக்தி வாய்ந்த, எலிசபெத் மகாராணி பற்றி, நீங்கள் அறிந்திராத விடயங்கள்..!!

17 புரட்டாசி 2018 திங்கள் 13:36 | பார்வைகள் : 13685


பிரித்தானியாவின் சக்தி வாய்ந்த மனிதரான எலிசபெத் மகாராணியால் மட்டுமே சில முக்கிய விடயங்களை செய்யவோ, கடைப்பிடிக்கவோ முடியும்.
 
ஓட்டுனர் உரிமம் பிரித்தானியாவில் வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம் எலிசபெத் மகாராணி பெயரில் தான் வழங்கப்படுகிறது. 
 
இதன் காரணமாக மகாராணி வாகனம் ஒட்ட ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க தேவையில்லை.
கடவுச்சீட்டு விமானத்தில் பயணம் செய்ய கடவுச்சீட்டு மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் நிலையில், எலிசபெத் மகாராணிக்கு மட்டும் அது தேவையில்லை.
 
தனி ஏ.டி.எம் அரச குடும்பம் மட்டும் உபயோகப்படுத்துவதற்காக பக்கிங்ஹாம் அரண்மனை கீழ் தளத்தில் அவர்களுக்காக பிரத்யேகமாக ஒரு ஏ.டி.எம் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
 
இரண்டு பிறந்தநாள் எலிசபெத் மகாராணி பிறந்த ஏப்ரல் 21ஆம் திகதி ஒரு பிறந்தநாளும், வருடா வருடம் யூன் மாதம் சனிக்கிழமை இன்னொரு பிறந்தநாளும் கொண்டாடப்படும்.
 
வானிலையை கருத்தில் கொண்டு ராணுவ அணி வகுப்பு நடத்த இவ்வாறு செய்யப்படுகிறது.
சட்டம் இயற்றும் உரிமை எந்த சட்டத்தையும் ஒரு உண்மையான சட்டமாக மாற்றுவதற்கு ஒப்புதல் தேவை. 
 
முன்மொழியப்பட்ட ஒரு சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டவுடன், எலிசபெத் மகாராணியின் பார்வைக்கு வரும். அதற்கு மகாராணி ஒப்புதல் அளித்தால் தான் குறித்த சட்டம் நிறைவேறும்.
 
வரி கட்ட தேவையில்லை எலிசபெத் மகாராணி எந்தவொரு வரியையும் கட்ட தேவையில்லை. ஆனால் தானாக முன்வந்து அவர் வருமான வரி மற்றும் மூலதன ஆதாய வரியை தவறாமல் கட்டி வருகிறார்.
 
அவுஸ்திரேலியா கெளரவ தலைவர் அவுஸ்ரேலியா நாட்டின் கெளவர தலைவராகவும் எலிசபெத் மகாராணி இருப்பதால், அந்த அரசுக்கு எதிரான நடவடிக்கையை கூட அவரால் எடுக்க முடியும்.
 
அன்னப்பறவை, டால்பின்கள் பிரித்தானியாவின் பொது வெளி தண்ணீரில் இருக்கும் அன்னப்பறவைகள், டால்பின்கள், திமிங்கலங்கள் ஆகியவை எலிசபெத் மகாராணிக்கே சொந்தமாகும்

வர்த்தக‌ விளம்பரங்கள்