பிறந்திருப்பேன் உனக்காக ....
2 சித்திரை 2013 செவ்வாய் 12:48 | பார்வைகள் : 16996
நித்தமும் மனதில்
எத்தனை போராட்டம்
இத்தனை காலம் வரை
குறையாத மனத் துயரம்
சுகமான சுமையாக
தொடர்ந்து நடக்கின்றேன் .
விரும்புகிறேன் அனுதினமும்
சொல்வதற்கு உன்னிடம்
புரியவேண்டும் என் மனதை
அறியவேண்டும் அன்பினை .
விரும்பவேண்டும் நீஎனை
கேட்கிறது ஆசைமனம்
ஆனாலும் வேண்டாம்
என்கிறது அறிவுமனம் .
விரும்புவதால் படும்துன்பம்
வேண்டாம் உனக்கென்று.
மனதிலும் நினைக்கவேண்டாம்
உறவாக என்னை
எனை உருக்கும் என் துன்பம்
உன்னை நினைத்தால்
பறந்தோடும்.- ஆனால்
உனை வருத்தும் உன் துன்பம்
உயிரின்றி எனை அழிக்கும்.
முடிந்தால் மறுபடியும்
பிறந்திருப்பேன் உனக்காக
துணையாக எனை நீ
தொடர்ந்து வந்தால்..
- சிவகுமாரி ஜெயசிம்மன்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan