Paristamil Navigation Paristamil advert login

நிலவு!

நிலவு!

14 ஆடி 2012 சனி 18:35 | பார்வைகள் : 16443


 

என் ஓட்டை வீட்டு
கூரையின் நடுவில்
எட்டி எட்டிப் பார்த்தது
வெள்ளை நிலவு!

விசயம் என்னவென்று
வினா எழுப்ப,
ஓவென்று அழுதது
கண்ணீர் பெருக
நிலவு.

வலி தாங்கும்
சூட்சுமத்தை
கற்றறிந்த மனிதனே!
தனக்கும் கற்றுத் தர
கோரிக்கை விடுத்தது
நிலவு.

விரிந்து கிடக்கும்
பிரபஞ்சத்தில்
முடிவில்லா பதையில்
தொடரும் நினைவுச்
சங்கிலியில்
சிக்குண்டு தவிக்கும்
தனிமையின் கொடுமையில்
நிலவின் கண்ணீர்..

பாவம் நிலவு!
உறவுகளால்
வஞ்சிக்கபட்டிருக்குமோ?
காதல் எனும்
விஷயத்தை ருசித்திருக்குமோ?
பிரியத்தின் மெளனத்தினால்
தண்டிக்கப்பட்டிருக்குமோ?
எதிர்பார்ப்புகளில் சிக்கி
ஏமாந்திருக்குமோ?
அதுதான் என்னமோ
தொட முடியா தூரத்தில்
துறவரம் பூண்டுள்ளது
நிலவு.

அப்பழுக்கில்லா
வெள்ளை நிலவுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
நானும் அப்படி தான் என்று.....

http://pirashathas.blogspot.com/

வர்த்தக‌ விளம்பரங்கள்