Paristamil Navigation Paristamil advert login

வாழ்க்கை துணைவி

வாழ்க்கை துணைவி

9 தை 2016 சனி 19:03 | பார்வைகள் : 13560


 கையிலே ஜ பாட்டு 

காதிலே காதணிப்பாடி 
கண்ணாலே அனுப்பிறியே 
காதல் என்னும் வலிப்பாட்டு 
  
சாலையிலே உன்னை 
கண்ட நாள் முதலாய் 
சோலையாய் மாறிச்சடி என் மனசு 
பூக்களோடு பேசுகிறேன் 
தரையில் நிற்க தவறுகிறேன்
கண்ணாலே உன்னை செல்பி எடுத்து 
நெஞ்சுக்குள்லே பதிவிறக்கம் செய்திட்டேன் 
 
கனவிலே குடையிறாய்
கவிதையாய் வெளிவருகிறாய் 
செய்தி தளங்களுக்கு அனுப்பி வைத்தேன் 
என்னையும் கவிஞன் ஆக்கிட்டாய்
முகநூலில தேடிப்பார்த்தேன் 
உன்னை உன்னை 
உன் பெயரை திறந்தேனே
மெல்ல மெல்ல 
குடும்ப படத்தில கன்னி நீ 
அழகாய் இருக்கிறாய் 
அம்சமாய் ஜொலிக்கிறாய்
நீ என் வாழ்க்கை துணைவி  என்று 
இலட்சியத்தை ஊட்டியதால்
வேகமாக பொருளாதாரத்தை
தேடத் தூண்டுகிறாய்
 
- தி.பரணிபாரதி
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்