அம்மாக்களுக்கு....!
27 ஆவணி 2016 சனி 20:02 | பார்வைகள் : 15785
தொலைக்காட்சித் தொடருக்குள்
தொலைந்து போயிருக்கும் அம்மாக்களே....!
உங்களுக்கு
ஓர் அவசர அறிவிப்பு
தார்ச்சியில் போட்ட பொரியல்
கருகிக்கொண்டிருக்கிறது!
வாளி நிறைக்க திறந்துவிட்ட
பைப்பால் தண்ணீர்
வழிந்தோடிக் கொண்டிருக்கிறது....!
பாடசாலையிலிருந்து
பசியோடு வந்த இளைய மகன்
களைந்துப்போய்
தூங்கிக்கொண்டிருக்கிறான்....!
வேலையிலிருந்து
வீட்டுக்கு வந்த கணவன்
வரவேற்பார் யாருமின்றி
விரக்தியிலே வெறுப்போடு
நின்றுகொண்டிருக்கிறான்....!
அம்மாக்களே
தொலைக்காட்சிப்
பெட்டிக்கு முன்னால்
தொல்லை மறந்து
கிடந்தது போதும்
விழுந்து கிடக்கும்
உங்கள் குடும்பத்தை
தூக்க எழுந்து கொள்ளுங்கள்.....!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan