Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

காதலில் காமம் இவ்வளவுதானா?

காதலில் காமம்  இவ்வளவுதானா?

30 வைகாசி 2016 திங்கள் 07:27 | பார்வைகள் : 16562


 திருமணமான தம்பதியரிடையே செக்ஸ் உறவு என்பது அவசியமான, மகிழ்ச்சி தரக்கூடிய விடயம். ஆனால் காதல் பருவத்தில் காமத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது அவசியம் என்கின்றனர் காதல் பற்றிய ஆய்வாளர்கள்.

 
காதலிக்கும் போது உறவு அனுபவித்த உடன், அட இவ்வளவுதானா? என்ற நிலை ஏற்பட்டுவிட்டால் காதல் காணாமல் போய்விடும். திருமணத்திற்கு முன் உறவில் ஈடுபடுவதில் தவறொன்றுமில்லை என்று கூறுபவர்கள் மேற்கொண்டு படித்து முடிவு செய்யுங்கள்.
 
வித்தியாசம் அதிகம்
 
காதல் என்பது உணவை கண்டு ரசிப்பது. ஆனால் காமம் என்பது அந்த உணவை அனுபவித்து உண்பது என்கின்றனர் காதல் ஆய்வாளர்கள்.
 
ஆண்களது செக்ஸ் ஆர்வமும், பெண்களது செக்ஸ் ஆர்வமும் மிக வித்தியாசமானது. தேவையான அளவு செக்ஸ் அனுபவித்ததும் அதைவிட சிறப்பாக வேறு பெண்ணிடம் செக்ஸ் கிடைக்கும் என அலையும் மனம் ஆண்களுக்கு உண்டு. ஆனால் பெண்கள் இயல்பாகவே ஒரே ஒருவரிடம் மட்டுமே உறவு கொள்ள விரும்புவார்கள்.
 
பிரச்சினைகள் உருவாகும்
 
காதலர்கள் ஒருமுறை தவறு செய்துவிட்டால் அதுவே ஒரு தைரியத்தை ஏற்படுத்திவிடும். பின்னர் அடிக்கடி தவறு செய்யத் தூண்டும்.
 
மீண்டும் ஒருமுறை சம்மதிக்காவிட்டால், புதுசா என்ன என்பது போன்ற பேச்சுக்கள் வந்துவிட்டால் காதலில் மரியாதையும், அன்பும் காணாமல் போய்விடும்.
 
காதல் முறிந்து விடும்
 
காதலர்களுக்குள் அடிக்கடி சண்டைகள் வருவது இயல்பானதுதான் அப்படிப்பட்ட நேரத்தில் உறவுக்கு சம்மதித்தது பற்றி கேவலமாக பேசப்பட்டுவிட்டால் காதல் முறிந்துபோய்விடும். பெண் யார் கேட்டாலும் உறவுக்க சம்மதிப்பவராக இருப்பார் என்ற எண்ணம் ஆணுக்கு வந்துவிடும்.
 
பிளாக்மெயில்
 
-0சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில் தேவையில்லாத கர்ப்பம் ஏற்பட்டு அதனால் பெரும் பிரச்சனைகள் உண்டாகலாம். ஒருவேளை காதலரை கைப்பிடிக்க முடியாமல் போய்விட்டால், வேறொருவரை திருமணம் செய்ய நேரும் பட்சத்தில் அந்த குற்ற உணர்வு மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும். பெண்ணை பிளாக்மெயில் செய்வதற்கு இந்த சம்பவம் வழிவகுத்துவிடும்.
 
குற்ற உணர்வு
 
திருமணத்திற்கு முன் உறவில் ஈடுபட்டவர்கள் ஏதோ ஒரு மிகப்பெரிய குற்றம் செய்ததாக மனம் உறுத்திக்கொண்டே இருக்கும். காதலர்கள் இருவருக்குமே திருமணம் வரையில் கூட கற்பை காப்பாற்ற முடியவில்லையே என்ற தன்னிரக்கம் ஏற்பட்டுவிடும். ஆண், பெண் இருவரிடமும் ஒரு அவநம்பிக்கை வந்துவிடும். எதிர்காலம் பற்றிய பயம் உண்டாகும். தேவையில்லாமல் அவசரப்பட்டுவிட்டோமே என்ற குழப்பம் இருந்துகொண்டே இருக்கும்.
 
உறவுச் சிக்கல் ஏற்படும்
 
திருமணம் முடித்த பின்னர் அவர்களுக்குள் புதிதாக ஒன்றுமில்லை என்பதால் அதற்காக அவசரப்படுதல் நின்று போய்விடும். பெண் அதற்குப் பின் அதிகமாக அவசரப்படுபவளாகவும், ஆண் நழுவுபவனாகவும் இருப்பான்.
உறவு முழுமையானதாக இல்லாத பட்சத்தில் இருவருக்கும் பிறர் மீது சந்தேகம் வந்துவிடும். செக்ஸ் திருப்தி தர முடியாத இவருடன் எப்படி வாழ்நாள் முழுவதும் சேர்ந்திருக்க முடியும் என்ற எண்ணம் தோன்றும்.
 
காதலிக்கும் போது காமத்தின் மீது ஆசை வைத்து உறவில் ஈடுபட்டால் அதற்குப்பின், அங்கு எதிர்பார்ப்புகள் எதுவும் இருக்காது பெரும் ஆர்வமும் இருக்காது. எப்போதுமே கிடைக்காத பொருள் மீதுதான் ஆர்வம் அதிகமாக இருக்கும் என்பது ஆய்வாளர்களின் அறிவுறுத்தலாகும்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்